2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பாரிய விபத்து ; இருவர் பலி

Janu   / 2023 ஜூன் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலே இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(6)காலை  அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற வேன் ஒன்றும்,திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கிண்ணியா பகுதியைச் 45 மற்றும் 47 வயதுடைய இருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வேனில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனரக வாகனத்தின் சாரதிக்கும்,உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் 

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X