2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாலம் இடிந்து விழும் அபாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா, கொழும்பு வீதியில் அமைந்துள்ள கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான குட்டிக்கராச் பாலத்தின் மற்றுமொரு பகுதியும் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதென, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்தின் முதற் பகுதியில், இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், போக்குவரத்தில் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் 2010ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, அகலமாக்கப்பட்ட இப்பாலத்தினூடாக, நாளொன்றுக்கு பல கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்தும் இடம்பெறுகின்றன.

எனவே, பொதுமக்களின் போக்குவரத்து அசௌகரியங்களுக்குட்படாமல், சீராகப் பயணிக்க வேண்டுமாக இருந்தால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இவ்விடயம் தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X