Freelancer / 2023 மே 30 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பிரதான வீதியின் இருமருங்கிலும் யானை வேலிகள் உள்ள போதிலும் அதனை உடைத்துக் கொண்டு யானைகள் வீதியில் வந்து நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
யானைக் கூட்டங்கள் பகல் வேளையிலும் வீதியை நோக்கி படையெடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இதனால் மாலைநேரங்களில் திருகோணமலை நகரிலிருந்து வேளைக்குச் சென்று வீடு செல்வோர் பீதியுடன் பயணிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகள் கிராமங்களுக்கு புகுந்து வாழை மற்றும் தென்னம் தோட்டங்களை துவம்சம் செய்து வருகின்றதோடு, கடந்த காலங்களில் இவ்வீதியில் மூன்று பேர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (N)
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago