Princiya Dixci / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேரை, நேற்று (13) கைதுசெய்துள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, குருநாகல், மாத்தறை, குச்சவெளி பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 45, 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பூஜைக்குப் பயன்படுத்தும் சில பொருட்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 6 பேரில் ஒருவர் தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாற்றி வருபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago