Mayu / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (30) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினத்தன்று குறித்த 17 வயதுடைய சிறுமி புதிய ஆடை ஒன்றினை தைப்பதற்காக சுகாதார வைத்திய பணிமனைக்கு அருகில் உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது குறித்த இளைஞர் புதிய ஆடையை தைத்து தருவதற்கு சற்று நேரம் ஆகும் அதனால் இவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிவித்துள்ளதோடு சற்று நேரத்தின் பின் கடையை மூடிவிட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்கம்மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
16 minute ago
27 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
27 minute ago
33 minute ago