2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுனர்கள் 26 பேருக்கு கால்நடை நாளை வழங்கி வைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுனர்கள் 26 பேருக்கு கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொள்வதற்காக, கால்நடை வளர்ப்பு பிராணிகள் வழங்கும் நிகழ்வு நாளை(14) காலை 9 மணிக்கு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறயிருப்பதாக, திருகோணமலை மாவட்ட புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சமூக பொருளாதார மற்றும் நலன்புரி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் மேஜர் எச்.எஸ்.டி.பெரேரா தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுனர்களுக்காக கட்டம் கட்டமாக சுய தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது பிரதான நோக்கமாக காணப்படுவதாகவும் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .