எப். முபாரக் / 2018 மார்ச் 22 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை தகாத வார்த்தையில் தூற்றிய மூவரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.
முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 26, 45, 60, வயதுடைய மூவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் உறவினர்கள் என்பதோடு, பெண்ணொருவரோடு, பணக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்டு வந்த நிலையிலே, அப்பெண்ணோடு குறித்த மூவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, தகாத வார்த்தைகளாலும் தூற்றியமையால், அப்பெண், சந்தேகநபர்களுக்கெதிராகப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைபாட்டுக்கமைய, சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
7 minute ago
20 minute ago
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
23 minute ago
37 minute ago