Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை வெருகல் பகுதியில் போதையில் பிரதான வீதியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட நபயொருவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(21) உத்தரவிட்டார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்,மாவடிச்சேனை,வெருகல் பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த நபர் மதுபோதையில் பிரதான வீதியில் நின்று கொண்டு ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதோடு,வீதியால் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்தாகவும் தெரிவித்து சேருநுவர பொலிஸாருக்கு பொது மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் இவரைக் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். இதன்போது மூவாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைத் தண்டனையை விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
7 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago