Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை பகுதியில் 45 போதை மாத்திரைகளை வைத்திருந்த மூவரை, நாளை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (04) உத்தரவிட்டார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27, 21, 19 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை போதைபொருள் குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருகோணமலை - மரத்தடி பகுதியில் சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 15 போதை மாத்திரைகளை வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதை மாத்திரைகளை, நூறு ரூபாய் வீதம் சந்தேகநபர்கள் விற்பனை செய்து வந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago