எப். முபாரக் / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் கைதுசெய்யப்பட்ட 60 வயது நபரொருவரை, நாளை மறுதினம் (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
இந்நபர், திருகோணமலைப் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையொன்றில், போலி 5,000 ரூபாய் நாணயத்தாளை மாற்ற முற்பட்ட போது, அக்கடை உரிமையாளருக்கு, பணத்தின் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருகோணமலை தலைமையகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago