2025 மே 23, வெள்ளிக்கிழமை

போட்டிப்பரீட்சை

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தரம் 111ஆம் வகுப்புக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளுவதற்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுவதற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு, அனுமதி அட்டைகள்  அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க தெரிவித்தார்.             

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகள் திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.                     

அனுமதி அட்டைகள் கிடைக்காத பட்டதாரிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X