Niroshini / 2016 மே 29 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாயில் இளம் பெண்ணொருவரின் கையைப்பிடித்த சந்தேக நபரை அடுத்தமாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய், ரஜஎல ,பகுதியில் உள்ள பெண்ணொருவரின் கையைப்பிடித்ததாக குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபரை சனிக்கிழமை (28) பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை இன்று(29) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
3 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
55 minute ago
1 hours ago