2025 மே 21, புதன்கிழமை

பொது நூலகம் திறந்து வைப்பு

Thipaan   / 2016 ஜூன் 12 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, எம். முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் பல வருடகாலமாக குறையாகக் காணப்பட்டு வந்த பொது நூலகம், நகர சபையின் முன்னாள் தலைவரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால், நேற்று சனிக்கிழமை (11) மாலை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இப் பிரதேச இளைஞர்களது வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி மகரூப் இப் பொது நூலகத்தை் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச சபை செயலாளர் அன்வர் ஜெமீல், மஜ்லிஸ் சூரா சபையின் தலைவர் ஏ. எம்.ஹிதாயத்துல்லாஹ் (நளிமி), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கே. முனவ்வர் கான் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய முன்னாள் நகர சபைத் தலைவர்,

நூலகமொன்று திறக்கப்படுவது, ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்குச் சமமானதாகும். வாசிப்புப் பழக்கம், ஒரு மனிதனைப் பூரணமான மனிதனாக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தப்பகுதியில்  பல அரசியல்வாதிகள் இருந்தும், கல்வி நடவடிக்கையில் அக்கறைகாட்டாத பட்சத்தில் இந்த பொது நூலகம் திறக்கப்படுவது, காக்காமுனை பகுதியில் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X