2025 மே 19, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய அறுவருக்கும் அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, தாவுல்வெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேரையும், இரண்டு குற்றங்களுக்காக தலா 45,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

அடையாளப்படுத்தப்பட்ட புராதன இடத்துக்குச் சென்ற முதலாவது குற்றத்துக்காக தலா 20 ஆயிரம் ரூபாயும் அவ்விடத்துக்குச்சென்று புத்த சிலையின் வடிவத்தை மாற்றிய இரண்டாவது குற்றத்துக்;காக தலா 25 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணமாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி கோமரங்கடெவல பொலிஸாரினால் தாவுல்வெவ பகுதியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்குமான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X