Princiya Dixci / 2017 ஜனவரி 21 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
திருகோணமலை, வெருகல் மலைக்கோவில் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு அருகில் புதையல் தோண்ட முற்பட்ட குழுவொன்றை, வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சேருநுவர பொலிஸார் மடைக்கிப் பிடித்துள்ளனர்.
இவர்களில் கைதுசெய்யப்பட்ட நாவ்வரையும், மூதூர் நீதிமன்றில் நேற்றுப் பொலிஸார் ஆஜார் செய்திருந்தனர். இதன்போதே, நீதிமன்றம் இவர்களை, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பகுதியிலிருந்து வந்த எட்டுப்பேரைக் கொண்ட குழுவினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, தகவலொன்றின் அடிப்படையில் சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டதுடன், புதையல் தோண்ட அவர்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கைப்பற்றப்பட்டன.
ஏனைய நால்வரும் தப்பியோடியுள்ளனர். குறித்த குழுவினார் வந்த காரொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாணைகளை சேருநுவரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025