Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 23 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
திருகோணமலை மாவட்ட நில அளவைக் காரியாலயம் புதிய இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக, பிரதேச நில அளவை அதிகாரி க.சிவானந்தம் தெரிவித்தார்.
இதற்கென 33 மில்லியன் ரூபாய் செலவில் உட்துறைமுக வீதியில் புதிய மாடிக்கட்டடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக்கட்டடத்துக்கே அலுவலகம் நிரந்தரமாக மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.38 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் இவ்வலுவலகம் திருகோணமலை உப்பு வெளி லவ்லேன் பகுதியில் இயங்கிவருகின்றது.
இதேவேளை, நிலஅளவைத் திணைக்களத்துக்கான உல்லாச விடுதி ஒன்றும் குச்ச வெளிப்பிரிவில் உள்ள சலப்பையாறு பகுதியில் எதிர்வரும் 26ஆம் திகதியன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதுவும் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago