2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பாம்புக் கடிக்கு இலக்கான 4 பேருக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

பாம்புக் கடிக்கு இலக்கான நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

சனிக்கிழமை (05) மாலை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலைவரை நான்கு பேர் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கல்கடவெல-கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எஸ்.மஹிந்தபால (வயது 48), நிலாவெளியைச் சேர்ந்த என்.பைரூஸ் கான் (வயது 27), கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த சரோஜா (வயது 39) மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனுமே பாம்புக் கடிக்குள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .