Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் கடையொன்றை உடைத்து கடையிலுள்ள பொருட்களை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (06)உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றை உடைத்து, அங்கிருந்த பொருட்களை குறித்த இளைஞர் திருடியுள்ளார்.
இதுதொடர்பில் கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026