Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை வழங்கி மோசடி செய்த வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த இருவரை, இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராசா, நேற்று செவ்வாய்கிழமை (01) உத்தரவிட்டார்.
வெலிமடை, தம்பவின்னப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும், திருகோணமலைப் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டட வேலைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடையொன்றில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான போலியான காசோலையினைக் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்கள்.
கடை உரிமையாளர், காசோலையில் குறிப்பிடப்பட்ட திகதியில் வங்கிக்குச் சென்று பணத்தைப் பெறுவதற்கு முயன்ற வேளையில் போலியான காசோலை வழங்கப்பட்டுள்ளதை அறிந்து, திருகோணமலைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்களை, வெலிமடைப் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்ததாகத் திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும், திருகோணமலைப் பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைத் திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026