Princiya Dixci / 2016 ஜூன் 23 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுப் புதன்கிழமை (22) இடம்பெற்ற இவ்விபத்தில், தோப்பூர், பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஹிஸாம் (19 வயது) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் வைத்தியசாலைக்கு அருகில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞனுக்கு, பொலிஸார் விசில் ஊதிய போது, அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார்.
இதன்போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்ததினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த அவர், தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், திருகோணமலை பொது வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
26 minute ago