Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எப். முபாரக் / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலின் போது, கிழக்கு மாகாண சபையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என, கிண்ணிய நகர சபையின் முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டதரணி ஹில்மி தெரிவித்தார்.
கந்தளாயில், நேற்று (29) மாலை இடம்பெற்ற, கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிகரித்துக் காணப்படுவதாக கூறிய அவர், எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவதற்கென்று, பல மக்களும், கட்சியோடு இணைந்தவண்ணமுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எனவே, 44 சதவீத முஸ்லிம் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில், தாம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கட்சியின் தலைமைத்துவத்தோடு. அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம், வெற்றியடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago