Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:10 - 1 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் குறைகளைத் தீர்க்கக் கூடிய, தேவைகளைப் பூத்தி செய்யக் கூடிய ஒரு தீர்வையே தாம் ஏற்போம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், மாறாக மக்கள் விரும்பாத, மக்களுக்கு நன்மையளிக்காத எந்தவொரு தீர்வையும் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.
இலங்கை தமிழரசுச் கட்சியின் மாவட்டக்கிளை, பிரதேசக் கிளை பிரதிநிதிகளுடன், திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இவர் இதனைத் தெரிவித்தார்.
சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வர வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் பணியாற்றத் தாம் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்புச் சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டு, பல படிமுறைகளைக் கடந்து சென்றுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நீடிக்காமல், அதனை அமுல்படுத்த வேண்டுமென்பதற்காக ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக நாளை மறுதினம் (28) சந்தித்துக்கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதில் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, எமக்கு எவரும் எதிரிகள் அல்லர் எனக் கூறிய இரா.சம்பந்தன், ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வரும் போது, மக்களின் கருத்தைக் கேட்டு, ஆலோசனைகளைப் பொறுவோம் எனவும் தெரிவித்தார்.
9 hours ago
16 Aug 2025
16 Aug 2025
J.sharmila Thursday, 28 February 2019 05:51 AM
கிழக்கு மாகாண மக்களின் தற்கால மிகப்பெரிய தேவை தொழில் வாய்ப்பு . இனவிகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதை தடை செய்யுங்கள் . நீண்டகால யுத்தத்தால் உயிர்களையும் ,உடைமைகளையும் இழந்த தமிழர்கள் தற்போது அரச தொழில் நியமனங்களை இழக்கின்றார்கள் .வர்த்தகமானி அடிப்படையில் பரீட் சைகளில் சித்தியடைந்து வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெறுபவர்கள் இனவிகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதனால் தொழில் நியமனங்களை இழக்கின்றார்கள் . எனவே இனவிகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதை தடை செய்யும் தீர்வை தீர்வுத்திட் டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Aug 2025
16 Aug 2025