Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
பொன் ஆனந்தம் / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், கணேசபுரம், குறவன்பட்டவான் மலையடிவாரத்தில் கிரவல் அகழ்வில் சிலர் ஈடுபட்டதால், பொதுமக்கள் நேற்று (01) குழப்பமடைந்தனர்.
குறித்த அகழ்வில் ஈடுபட்டவர்கள், திருகோணமலை நகரின் நலாம்கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் மூதூர் பிரதேச செயலாளரிடம் அனுமதியைப் பெற்றிருந்ததாகவும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வன இலாக உள்ளிட்ட கிராம அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் தகவலை வழங்கியதுடன், குறித்த பொருத்தமற்ற பணியை உடன் நிறுத்துமாறும் கோரிக்கைவிடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன இலாகாவினர் அகழ்வை நிறுத்தியதுடன், மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்களையும் குறித்த இடத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்தனர்.
மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள், வனஇலாவால் போடப்பட்டிருந்த எல்லைக்கற்களையும் அகற்றிவிட்டு, கிரவல் மணல் அகழ்வில் ஈடுபட்டதாக, வனஇலாகாவினரிடம் பொதுமக்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.
குறித்த அகழ்வை நிறுத்தி, பிரதேசத்தின் சூழலைப்பாதகாக்குமாறும் அங்கு கூடிய மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
இந்நிலையில் கிரவல் அகழும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை வன இலாகாவினர் மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago