எப். முபாரக் / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, உழவு இயந்திரங்கள் இரண்டில் மணல் ஏற்றிச் சென்ற சாரதிகள் இருவர், நேற்றிரவு (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 43, 51 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், வான்எல பகுதியிலிருந்து கந்தளாய்க்கு அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிச் சென்ற போது, கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
7 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
29 minute ago
46 minute ago