Princiya Dixci / 2016 மார்ச் 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் கிண்ணியா, பூவரசந்தீவுப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே, திருகோணமலை நீதவான் நீதமன்ற நீதவான் ஹயான் மீஹககே, இன்று செவ்வாய்க்கிழமை (08) இந்தத் அபராதத்தை விதித்தார்.
குறித்த இருவரையும், கிண்ணியாப் பொலிஸார் கைதுசெய்திருந்ததுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட மணல், அரசுடமையாக்கப்பட்டது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026