2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மணல் ஏற்றிய ஒன்பது பேர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலப்பொல பகுதியில் மகாவலி கங்கைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது பேர் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மணல் ஏற்றப்பட்ட ஏழு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சந்தேக நபர்கள் மணல் ஏற்றுகின்றமை தொடர்பில் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கங்கைப் பகுதியை சுற்றிவளைத்தபோது, இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் இந்தச் சந்தேக நபர்கள் சேருநுவரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இவர்களை, மூதூர் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு பணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X