Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு பாலத்துக்கு கீழ் அண்மைக்காலமாக கடல் மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல பாதக விளைவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் அரிப்பு,வெள்ள அனர்த்தம், இயற்கை அழிவு என பல பாதகமான விளைவூகளை தாங்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளதால் இம் மண் அகழ்வை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கந்தளடி ஊற்று, உப்பாறு கிராமம் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இவ்மண் அகழ்வால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதுடன்,பல உழவு இயந்திரங்களில் கடல் மண் ஏற்றிச் செல்லப்படுவது மற்றுமின்றி கடல் மண் கொள்ளை அதிகரித்திருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, மண் அகழ்வை நிறுத்துவதற்கு உரிய அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
35 minute ago
41 minute ago