2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் இன்று முற்பகல் இடம்பெறுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலை, ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு சூடுபிடித்துள்ள நிலையில் இதன்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று, திருகோணமலையில் இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X