Sudharshini / 2016 மார்ச் 06 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் மதுபோதையில் மக்களுக்கு இடையூறு விளைவித்த நபரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் சனிக்கிழமை (5) உத்தரவிட்டார்.
மூதூர், சந்தோசபுரம் பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய நபர் ஒருவர், சனிக்கிழமை (5)மேற்படி பகுதியில் மதுபோதையில் வீதியில் சென்ற பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி நபரை கைதுசெய்து மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026