2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மரக்கன்றுகளும் விதைகளும் வழங்கப்பட்டன

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத் 

இவ்வாண்டுக்கான பத்து இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் துரித சௌபாக்யா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 50  பெண் விவசாயிகளுக்கு 03 வகையான  நாற்று மரக் கன்றும், 05 வகையான விதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தேசிய வேலைத்திட்ட  நிகழ்வு, முள்ளிப்பொத்தானை கம நல சேவை நிலையத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இதன்போது கத்தரி, மிளகாய் என்பன சாடிகளோடவும், விதைகள், போஞ்சி, வெண்டி, கத்தரி, பயிற்றை, கறி மிளகாய் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

சாலிய அருன, சதாம் நகர் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளருமான பிரிவுக்கான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தருமான எம் எஸ் அப்துல் ஹலீம், 50 பயன்பெறும் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம் இவற்றைக் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .