Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரக்கஹவௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரமொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் 38 வயதுடைய ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் காணப்படும் முதிரை, கருங்காலி, தேக்கு ஆகிய மரங்களை வெட்டி விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் காணப்பட்ட இருவர் தப்பியோடியுள்ளதாகவும் அவ்விருவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
10 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
37 minute ago