2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மரமுந்திரிகை அறுவடை ஆரம்பம்

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

தோப்பூர் மீள்குடியேற்ற கிராமமான தாயிப்நகர், ஹிஜ்ராநகர் போன்ற கிராமங்களில் செய்கை பண்ணப்பட்ட மரமுந்திரிகை அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் தோப்பூர் பிரதேசத்தில் மரமுந்திரிகை அதிக விளைச்சலை கொடுத்துள்ளமையால் மரமுந்திரிகையின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, 50 முந்திரி பழங்கள் 40 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்தோடு, தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் மரமுந்திரிகையை கொள்வனவு செய்துவருவததை அவதானிக்க முடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .