Freelancer / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தீஷான் அஹமட்)
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறிமங்களபுர காட்டுப்பகுதியில் யானையொன்று நேற்று (12) இறந்த நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்த நிலையில் காணப்படும் யானையானது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் அந்த யானையின் உடம்பில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்தது போன்ற காயம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று காலை வருகைதந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

மேலும், குறித்த யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025