2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மாடு மேய்க்க சென்றவர் முதலை கடித்து மரணம்

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றின் கரையோரத்தில்  மாடு மேய்க்க சென்ற ஒருவர், முதலை கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம்   ஞாயிற்றுக்கிழமை  (03)இடம் பெற்றது.

இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் வயது(36) என்பவரே இலக்காகியுள்ளார்.

மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு குறித்த ஆற்றில் காணாமல் போயூள்ளார் இது தொடர்பில் பொது மக்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டனர். 

அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X