Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில், உயர்தர வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அந்த வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் தெரிவித்தார்.
எனினும் மேற்படி மாணவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது, எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றியதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றும் எனவே, பெற்றோர் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ.அஜீத் தெரிவித்தார்.
மேற்படி வித்தியாலயத்துக்கு, இன்று (19) 10 சதவீதமான மாணவர்களே சமூகமளித்தனர் என்றும் ஆசிரியர்களின் வரவு 99 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
26 minute ago
29 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
40 minute ago
44 minute ago