ஏ.எம்.ஏ.பரீத் / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலருக்கு, இம்முறை மானிய பசளை இல்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பப்படிவங்கள் பூரணப்படுத்தலில் உள்ள குறைபாடு இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
குறித்த விவசாயிகளின் படிவங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது, கமநல சேவை அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் கடமையாகும்.
இந்த விடயத்தில் பாராமுகமாக இருந்து விட்டு, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை இல்லாமல் ஆக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தை மேல் மட்டங்களுக்குக் கொண்டு சென்று, விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோருகின்றனர்.
37 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
59 minute ago
1 hours ago