Freelancer / 2023 டிசெம்பர் 06 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 120 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரர் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதுடன், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். R
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago