2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி  பிரதேசத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையம், நேற்று (23) திறந்துவைக்கப்பட்டது.

கிண்ணியா மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அமைப்பால்  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் முஹமது கனி, கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.கலக்கி, கிண்ணியா பிரதேசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸ்மி, சமூக சேவைகள் அதிகாரி எம். எஸ். கபீபுள்ளா, குறிஞ்சாக்கேணி சமுர்த்தி முகாமையாளர் எம்.ஏ.எம். ரிஸ்வி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பஹ்மி, அல்ஹஸனாத் அனாதை இல்ல அதிபர் ஏ.அமீர்கான்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .