எப். முபாரக் / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் கார்த்திகை 27 மாவீரர் நாள் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பெரும்பான்மையின மக்களால், நேற்று (27) மாலை மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், கந்தளாய் பஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு மோட்டார் பவனி, கந்தளாய் மணிகூட்டுக் கோபுரம் கூடாகச் சென்று, கந்தளாய் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
மாவீரர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின இளைஞர்கள், யுவதிகள் கோஷங்களோடு இதில் பவனி சென்றனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினரால் பல போராட்டங்களுக்கு மத்தியில் யுத்தத்தை வெற்றி கொண்ட இந்நாட்டில், மா வீரர் தினத்தை நடத்த அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாதென்றார்.
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago