Editorial / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கொட்பே மீன்பிடி கிராமத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் திருகோணமலை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று (26) மாலை மேற்படி சந்தேகநபரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 7 கிலோகிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய குடும்பஸ்தர் ஆவர். அவரை, சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .