எப். முபாரக் / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளிப் பகுதியிலுள்ள மீன் வாடியில், இரு குழுக்களுக்கிடையில் நேற்று (29) இரவு ஏற்பட்ட மோதலில், மூவர் காயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி, சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த 23, 25, 21 வயதுடைய மூவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டைனமையிட் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பான ஒரு குழு, மற்றைய குழுவைப் பொலிஸாரிடம் காட்டிக் கொடுத்தமையினாலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago