Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், எம்.எஸ்.எம்.நூர்தீன்
திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, மிக விரைவில் இவ் வைத்தியசாலை தரமுயர்த்தப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
யுத்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு, பல்வேறு அடிப்படைத் தேவைகளுடன் இயங்கும் மூதூர் வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவைகள் மிக விரைவில் தீர்க்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர், மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு காணப்படும் பல்வேறு தேவைகள் குறித்து ஆராய்ந்ததுடன், அங்கு காணப்படும் நிலை குறித்தும் கண்டறிந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
6 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
25 minute ago