Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்வதற்காக திருகோணமலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை (Notice) பிறப்பித்துள்ளதுடன், வெளிநாட்டு பயணத்தடையையும் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த 47 வயதுடைய கந்தையா கஜன் என்பவருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனது மைத்துனருக்கு கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, 9,742,600 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக திருகோணமலை - சீனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago