2025 மே 21, புதன்கிழமை

மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூன் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, புல்மோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவிகள் ஐவரை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எல்.ஜீ.வி. பெர்ணான்டோ, நேற்றுப் புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டவர், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஜானதிலக கருணாசேன (40 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த குறித்த ஆசிரியர், 14 மற்றும் 15 வயது மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உற்படுத்தியதாக, குறித்த மாணவிகளின் பெற்றோரால், புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை(07) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டினையடுத்து, ஆசிரியரை கைது செய்து விசாரணை செய்த போது, மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X