Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், சின்னக்கலுவான் வாய்க்காலில் முதலையினால் பிடித்து இழுக்கப்பட்ட ஒருவர் காப்பாற்றப்பட்டு காயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த டீ.துரையப்பா (வயது 38) என்பவரே இந்த அசம்பாவிதத்துக்குள்ளாகியுள்ளார்.
வாய்க்காலில் தனது மாடுகளுக்கு தண்ணீர் அருந்தக் கொடுத்துக்கொண்டிருந்த இவரை அவ்வாய்க்காலிலிருந்த முதலையொன்று பிடித்து இழுத்துள்ளது. இதன்போது, அவ்வாய்க்காலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒருவர் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago