2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மேதினச் சிறப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மேதினச் சிறப்பு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'இலக்கியமும் மானிட விடுதலையும்' என்னும் தலைப்பில் எழுத்தாளர்களான க.கோணேஸ்வரன், இராஜதர்மராஜா, திருமலைநவம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மேலும் செ.ஞானராசா, நிலாவெளியூர் கெஜதர்மா, மு.யாழவன், சிவரமணி, ரி.லலிதகோபன், உ.பிரதீபா, வே.சசிகலா, எஸ்.சந்திரகலா ஆகியோர் பங்குபற்றும் சிறப்புக் கவியரங்கும் இடம்பெறும்.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள் கலைஞர்கள் கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .