Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 மே 10 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது முதியவரை காணித்தகராரின் போது தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 இளைஞரை சம்பூர் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞருக்கும் அவரது வீட்டுக்காரருக்கும் நேற்று காணிப்பிரச்சினை காரணமாக வாய்த்தகராரு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த 70 வயது வயோதிபர் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக பேசியுள்ளார்.
இதனையடுத்து, கோபமடைந்த குறித்த இளைஞன் வயோதிபரை தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளாகிய வயோதிபர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சம்பூர் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .