Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளையும் வெடிபொருட்களையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்குமாறு கோரி அங்கு இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடல்வள பாதுகாப்பு ஐக்கிய கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 42 மீனவச் சங்கங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
விஜிதபுரம் பகுதியில் ஒன்றுகூடிய மீனவர்கள் பேரணியாக திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து கிழக்கு மாகாண சபை முன்றலை வந்தடைந்தனர்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, பொலிஸார், கடற்படையினர், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவோர் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.
இதன் பின்னர், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபாலி சமரதுங்கவிடம் மீனவர்கள் மகஜரைக் கையளித்துவிட்டு, கலைந்து சென்றனர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago