2025 மே 21, புதன்கிழமை

மின்சார வேலியமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு கடிதம்

Thipaan   / 2016 ஜூன் 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள திரியாய் கிராமம், காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகவும், அக்கிராமத்துக்கான மின்சார வேலியமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறும் கோரிய கடிதம், பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரிடம் நேற்றுப் புதன்கிழமை (08) கையளிக்கப்பட்டதாக, குச்சவெளி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் வி.நிவேதிகா தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் செயலாளர் ரோ.பிரியங்காவினாலேயே இக்கடிதம் கைளிக்கப்பட்டதாகவும் பிரதேச செயலகக் கூட்டங்களில், இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு வருவதுடன் 2016ஆம் ஆண்டு இறுதிப்பகுதிக்குள் இவ்வேலைகள் முடிக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குச்ச வெளிப்பிரதேச பெண்கள் இணைய வலையமைப்பினர், அண்மையில்  திரியாய் கிராமத்தில் இதுதொடர்பான பெரியளவிலான  விழிப்புணர்வுக் கூட்டமொன்றை நடாத்தி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையும் அக்கூட்டத்துக்;கு அழைத்துக் கோரிக்கை மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைய, யானைத் தாக்கமுள்ள இரணைக்கேணி, குச்சவெளி, வீரஞ்சோலை, வடலிக்குளம் போன்ற இடங்களில் மின்சார பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டமை தொடர்பில், பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்ததனர்.

அதேவேளை, திரியாய் 5ஆம் வட்டாரத்தில் மின்வேலி அமைப்பதற்கான பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தும் வேலைகள் முன்னெடுக்கப்படாத நிலைகாணப்படுகிறது. இதனால் யானைத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் ஏற்கெனவே, யானைத் தாக்குதலால் 12 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X