Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை- கந்தளாய் குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய்- அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago